ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூருவை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த மும்பை..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூருவை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த மும்பை..!
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை - பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி முதல் பாதியில் 2 கோலும், இரண்டாம் பாதியில் 2 கோலும் அடித்து அசத்தியது. பெங்களூரு அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி இந்த தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.


Next Story