பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நடுவராக நியமிக்கப்பட்ட ரகு பிரசாத் ஆர்விக்கு ஆக்கி இந்திய கூட்டமைப்பு வாழ்த்து..!!


பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நடுவராக நியமிக்கப்பட்ட ரகு பிரசாத் ஆர்விக்கு ஆக்கி இந்திய கூட்டமைப்பு வாழ்த்து..!!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 14 Sep 2023 11:07 AM GMT (Updated: 14 Sep 2023 11:14 AM GMT)

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நடுவராக நியமிக்கப்பட்ட ரகு பிரசாத் ஆர்விக்கு ஆக்கி இந்திய கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

புது டெல்லி,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இதில் நடைபெறும் ஆக்கி போட்டிகளுக்கான நடுவராக இந்தியாவை சேர்ந்த ரகு பிரசாத் ஆர்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக் தொடரில் மூன்றாவது முறையாக நடுவராக பணியாற்ற உள்ளார். ரகு பிரசாத் ஏற்கனவே 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர்களின் ஆக்கி போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நடுவராக நியமிக்கப்பட்ட ரகு பிரசாத் ஆர்விக்கு ஆக்கி இந்திய கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ஆக்கி இந்திய கூட்டமைப்பின் தலைவர் பத்ம ஸ்ரீ டாக்டர் திலீப் டிர்க்கி கூறுகையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரகு பிரசாத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நடுவராக நியமித்ததற்கு நான் வாழ்த்துகிறேன். அவர் கடினமாக உழைக்கிறார் மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் ஆக்கி விளையாட்டில் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்கிறார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக்கில் நடுவராகப் பணியாற்றுவதில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது நிச்சயமாக பெருமைக்குரிய விஷயம். இந்த உயர் மதிப்பு போட்டிகளில் நடுவர்களும் சிறந்த பார்மில் இருப்பதற்கு வீரர்களைப் போலவே கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், அவர் மதிப்புமிக்க விளையாட்டுகளுக்குத் தயாராகிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.


Next Story