ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்


ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் ஆக்கி போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.

சான்டியாகோ,

ஜூனியர் பெண்களுக்கான 10-ஆவது உலகக் கோப்பை ஆக்கி போட்டி, சிலியில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் "சி'-யில் இடம் பிடித்திருக்கும் இந்தியா, முதல் ஆட்டத்தில் கனடாவை இன்று சந்திக்கிறது. இதற்கு முன் கனடாவை 3 முறை சந்தித்துள்ள இந்தியா, அனைத்திலும் வென்றிருப்பதால், இந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

முதலில் கனடாவை சந்திக்கும் இந்திய அணி, அதன் பிறகு வியாழக்கிழமையன்று ஜெர்மனியையும், டிசம்பர் 2-ஆம் தேதி பெல்ஜியத்தையும் எதிர்கொள்கிறது.

இந்திய அணி வருமாறு:- குஷ்பூ, மாதுரி கின்டோ, நீலம், பிரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி, மஹிமா டேட், மஞ்சு கோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பனோ, சுஜாதா குஜூர், ருதுஜா பிசல், சாக்ஷி ராணா, மும்தாஸ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா தோப்போ, சுனிலிதா தோப்போ.


Next Story