அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி 'சாம்பியன்'


அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி சாம்பியன்
x

இந்தியன் ரெயில்வே அணி 5-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியன் ெரயில்வே அணி 5-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ரெயில்வே வீரர் பிரதாப் லக்ரா 'ஹாட்ரிக்' கோல் (2, 24 மற்றும் 29-வது நிமிடம்) அடித்து அசத்தினார். அஜித் பாண்டே, தீபக் ஆகியோரும் அந்த அணியில் கோல் போட்டனர். கர்நாடக தரப்பில் திரிசூல் கணபதி, சேத்தன் கரிஸ்ரீ தலா ஒரு கோல் திருப்பினர்.

வாகை சூடிய ரெயில்வே அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த கர்நாடகா அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகையாக கிட்டியது. அத்துடன் ஆட்டநாயகனாக தேர்வான பிரதாப் லக்ராவுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையுடன், உயர்ரக சைக்கிளும் வழங்கப்பட்டது. பரிசுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சி.யூ.எம்.ஐ. சேர்மன் எம்.எம்.முருகப்பன், எம்.சி.சி. தலைவர் விஜய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story