நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; இந்திய மகளிர் அணி 3-வது இடம்


நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; இந்திய மகளிர் அணி 3-வது இடம்
x

image courtesy; twitter/@TheHockeyIndia

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

பெர்லின்,

ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றன.இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் ஆண்கள் பிரிவில் ஜெர்மனி அணி முதலிடம் பிடித்தது. இந்தியா 2-வது இடமும், ஸ்பெயின் 3-வது இடமும் பிடித்தன.

இந்நிலையில் பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த 4 நாடுகளுக்கு இடையிலான தொடரில் 3-வது இடம் பிடித்துள்ளது. பெண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடி வருகின்றன.


Next Story