மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்


மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 5 Nov 2023 4:19 AM GMT (Updated: 5 Nov 2023 4:55 AM GMT)

நடப்பு சாம்பியனான ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அதேபோல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, வலுவான யுக்தியுடன் இறுதிப்போட்டியில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் ஜப்பான் அணி களமிறங்க உள்ளது. இதனிடையே மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடர் 3-வது இடத்திற்கு சீனா-தென்கொரியா அணிகள் இன்று மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story