'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வி


ஏ டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வி
x

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வியை தழுவியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) 20-25, 22-25, 22-25 என்ற நேர்செட்டில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியிடம் தோல்வியை தழுவியது.

5-வது ஆட்டத்தில் ஆடிய ஐ.ஓ.பி. சந்தித்த 2-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி சரிவில் இருந்து மீண்டு 24-26, 28-26, 25-20, 25-21 என்ற செட் கணக்கில் சுங்க இலாகா அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை தனதாக்கியது.


Next Story