இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ரஷிய வீராங்கனையை வீழ்த்திய உக்ரைன் வீராங்கனை கலினினா


இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ரஷிய வீராங்கனையை வீழ்த்திய உக்ரைன் வீராங்கனை கலினினா
x

உலக தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினா, 5-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் வெரோனிகா குடெர்மிடோவாவை எதிர்கொண்டார்.

2 மணி 51 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை கலினினா 7-5, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை குடெர்மிடோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


Next Story