சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி


சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 17 July 2024 11:12 AM IST (Updated: 19 July 2024 10:06 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story