டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி

Update:2025-02-08 05:41 IST
Live Updates - Page 2
2025-02-08 04:19 GMT


டெல்லியில் பாஜக 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் எம்.பி அதுல் கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2025-02-08 04:05 GMT

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் துவக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி  19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழல் உள்ளது.

2025-02-08 03:51 GMT


தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி பாஜக 15 இடங்களிலும் ஆம் ஆத்மி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

2025-02-08 03:43 GMT

டெல்லியில்  பாஜக  40- க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால்  டெல்லியில்  பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.


2025-02-08 03:16 GMT

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள்

தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது:

பாஜக: 36

ஆம் ஆத்மி: 22

காங்கிரஸ்; 1

மொத்த தொகுதிகள்: 70: பெரும்பான்மைக்கு 36

2025-02-08 03:08 GMT

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை:  டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி,  மனிஷ் சிசோடியா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். ஆரம்ப கட்ட நிலவரப்படி ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பின்னடவை சந்தித்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2025-02-08 02:58 GMT

தற்போதைய நிலவரம்:

பாஜக: 17

ஆம் ஆத்மி: 13

காங்கிரஸ்: 01

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 36

2025-02-08 02:50 GMT

தற்போதைய முன்னிலை நிலவரம்;

பாஜக: 13

ஆம் ஆத்மி: 10

காங்கிரஸ்: 01

2025-02-08 02:45 GMT

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள்: ஆரம்ப கட்ட நிலவரப்படி பாஜக 11 இடங்களிலும் ஆம் ஆத்மி 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்