டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி

Update:2025-02-08 05:41 IST
Live Updates - Page 3
2025-02-08 02:32 GMT

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக கடந்த 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

2025-02-08 02:24 GMT


டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மாளவியா நகர் தொகுதி பாஜக வேட்பாளரான சதீஷ் உபத்யாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ நாட்டின் பிற பகுதிகளை போல வளர்ச்சி பெற வேண்டும் என தற்போது டெல்லியும் விரும்புகிறது. பிரதமர் மோடியின் வளர்ந்த பாரதம் கனவை டெல்லியும் கவனிக்கிறது. எனவே டெல்லியில் தாமரை மலரும். ஆம் ஆத்மி - காங்கிரஸ் தோல்வியை தழுவும் என்றார்

2025-02-08 02:19 GMT

 டெல்லி சட்டமன்ற தேர்தல்; காலை 8-மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது: முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்: அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். நண்பகலுக்குள் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்படும் எனத்தெரிகிறது.

2025-02-08 01:58 GMT

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுமா? அல்லது பாஜக முதல் முறையாக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2025-02-08 01:57 GMT

ஆம் ஆத்மி ஆட்சிதான் - மணீஷ் சிசோடியா

 ஆம் ஆத்மி ஆட்சிதான் - மணீஷ் சிசோடியாடெல்லி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்; டெல்லியில் குழந்தைகளின் கல்விக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். இதனால் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது- முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா

2025-02-08 01:36 GMT

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைக்குமா?, பாஜக ஆட்சியை பிடிக்குமா?, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்பது காலை 11 மணியளவில் தெரியவரும். டெல்லி தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்