டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி


தினத்தந்தி 8 Feb 2025 5:41 AM IST (Updated: 8 Feb 2025 5:23 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.


Live Updates

  • 8 Feb 2025 3:13 PM IST

    டெல்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வெற்றி-19, முன்னிலை-28

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 3 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 19 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • 8 Feb 2025 2:29 PM IST

    டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி நிலவரம்:  பா.ஜ.க.-6, ஆம் ஆத்மி-6

    டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றியும், 42 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று, ஆம் ஆத்மி 6 இடங்களில் வெற்றியும், 16 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

  • 8 Feb 2025 1:58 PM IST

    டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.  மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட  டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது.

  • 8 Feb 2025 12:36 PM IST

    டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியா தோல்வி அடைந்துள்ளார்.

  • 8 Feb 2025 12:07 PM IST

    ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடைவு!

     

    புதுடெல்லியில் - 430 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் பின்னடைவு!

    கல்காஜி - 3231 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி பின்னடைவு!

    மால்வியா நகர் - 5656 வாக்குகள் வித்தியாசத்தில் சோம்நாத் பார்தி பின்னடைவு!

    ஷகூர் பச்தி - 15745 வாக்குகள் வித்தியாசத்தில், சத்யேந்தர் ஜெயின் பின்னடைவு!

  • 8 Feb 2025 11:52 AM IST

    27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக!

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் தலைநகர் டெல்லி மோடி, அமித்ஷா கூட்டணிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கரம் கோர்க்கும் டெல்லிவாசிகள் சட்டமன்றத் தேர்தல்களில் கைவிட்டு வந்தனர். ஆனால் இம்முறை பாஜக பக்கம் தங்கள் பார்வையை டெல்லி மக்கள் திசை திருப்பி உள்ளனர்.

  • 8 Feb 2025 10:41 AM IST


    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். பாஜக மூத்த தலைவர் ராதிகா கேரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ பிரசாரத்தின் போதே களத்தில் முடிவை நாங்கள் பார்த்தோம். டெல்லியில் தாமரை மலர்கிறது. பாஜக ஆட்சி அமைக்க உள்ளது” என்றார். 

  • 8 Feb 2025 10:29 AM IST

    டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய முன்னிலை நிலவரம்

    பாஜக; 42

    ஆம் ஆத்மி: 28

    காங்கிரஸ்: 0

1 More update

Next Story