காஷ்மீரில் எல்லை தாண்டி வர முயன்ற பாகிஸ்தான் நபர் கைது
பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.;
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தபோது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற நபர் ஒருவரை கைது செய்தனர்.
அந்த நபர் கோட்லி மாவட்டத்தில் உள்ள டிடோட் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் முகமது ஆரிப் அகமத் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடைமைகளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.