பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

Update:2025-11-14 08:01 IST
Live Updates - Page 3
2025-11-14 10:00 GMT

போட்டியிட்ட 61 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 61 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஆர்.ஜே.டி. கட்சி 24-ல் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி மொத்தமாக 28-ல் முன்னிலை வகித்து வருகிறது.

2025-11-14 09:53 GMT

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 206 ( பா.ஜ.க. - 92 , ஜே.டி.யு. - 83 , எல்.ஜே.பி. - 20, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 5)

இந்தியா கூட்டணி - 32 (ஆர்.ஜே.டி. - 26 , காங்கிரஸ் - 4 , இடது சாரிகள் - 2)

பகுஜன் சமாஜ் கட்சி - 1

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

2025-11-14 09:10 GMT

பீகார்: கடந்த சட்டமன்ற தேர்தலை விட பின்னடைவு சந்தித்த இந்தியா கூட்டணி

* கடந்த சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி தற்போது 77 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

* பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி பின்னடைவை சந்தித்து வருகிறது.

* கடந்த தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்ற ஆர்.ஜே.டி தற்போது 52 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

* இந்தியா கூட்டணியில் 143 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி 52 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

* கடந்த சட்டமன்ற தேர்தலை விட 23 இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது.

2025-11-14 09:01 GMT

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 198 ( பா.ஜ.க. - 90 , ஜே.டி.யு. - 80 , எல்.ஜே.பி. - 20, ஆர்.எல்.எம். - 3 , மற்றவை - 5)

இந்தியா கூட்டணி - 38 (ஆர்.ஜே.டி. - 30 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 3)

பகுஜன் சமாஜ் கட்சி - 1

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

2025-11-14 08:49 GMT

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு ஒரு வாய்ப்பு - குஷ்பு

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்று தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பு கூறியுள்ளார்.

2025-11-14 08:24 GMT

பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை - தமிழக பாஜகவினர் கொண்டாட்டம்


பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வரும்நிலையில், கிட்டத்தட்ட வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

2025-11-14 08:14 GMT

வாழ்வா.. சாவா போராட்டம்.. இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 33,347 வாக்குகள்) மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 35,635 வாக்குகள் ( 2,288 வாக்குகள் அதிகம்) பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 201 ( பா.ஜ.க. - 91 , ஜே.டி.யு. - 81 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 4)

இந்தியா கூட்டணி - 36 (ஆர்.ஜே.டி. - 27 , காங்கிரஸ் - 4 , இடது சாரிகள் - 5)

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

2025-11-14 08:04 GMT

பீகாரில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் கட்சி 5 இடங்களில் முன்னிலை


பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (AIMIM) கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 199 ( பா.ஜ.க. - 90 , ஜே.டி.யு. - 81 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 3)

இந்தியா கூட்டணி - 38 (ஆர்.ஜே.டி. - 29 , காங்கிரஸ் - 4 , இடது சாரிகள் - 5)

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

2025-11-14 07:40 GMT

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க.: தற்போதைய நிலவரம் என்ன..?


பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 199 ( பா.ஜ.க. - 90 , ஜே.டி.யு. - 81 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 3)

இந்தியா கூட்டணி - 38 (ஆர்.ஜே.டி. - 29 , காங்கிரஸ் - 4 , இடது சாரிகள் - 5)

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

இதன்படி போட்டியிட்ட 101 தொகுதிகளில் 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. கடந்த 2020 பீகார் தேர்தலில் 74 இடங்களில் வென்ற பாஜக, தற்போது 90 இடங்களில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 



2025-11-14 07:32 GMT

பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர். விளையாட்டு தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் எடுபடாது - அகிலேஷ் யாதவ்


அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர். விளையாட்டு மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் அல்லது வேறு எங்கும் இனி சாத்தியமில்லை, ஏனெனில் இந்த தேர்தலில் சதி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை இனிமேல் விளையாட நாங்கள் அவர்களை அனுமதிக்க மாட்டோம். சிசிடிவி போலவே, எங்கள் 'பிபிடிவி' அல்லது 'பிடிஏ பிரஹாரி' விழிப்புடன் இருந்து பாஜகவின் திட்டங்களை முறியடிக்கும்.

பாஜக ஒரு கட்சி அல்ல, அது ஒரு மோசடி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்