நாகர்கோவிலில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது: கார், பைக் பறிமுதல்

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர்களை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.;

Update:2025-09-14 17:53 IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கமல்யூசுப் (வயது 27), மாதவலாயம், மைதீன்புரம் பகுதியை சேர்ந்த ஷாஜகான்(22), சிறமடம், ஞாலம் பகுதியை சேர்ந்த புரூஸ்லீ(35) ஆகிய 3 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ (1.5 கிலோ) கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்