இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிகாந்துக்கு அழைப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.;
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று 13.9.2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா”-விற்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது முதல்-அமைச்சரின் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.