நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு

நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.;

Update:2025-06-17 19:16 IST

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் என்பவருக்கும் அவரது மருமகன் காசிமுத்து என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை காசிமுத்து, பாக்கியராஜின் வீட்டிற்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாக்கியராஜ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காசிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்