சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு- மாநகராட்சி உத்தரவு

சென்னையில் சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-07-01 15:18 IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராத தொகையினை பின்வருமாறு உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டடங்களின் வகைகளை பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதம் ரூ.10 ஆயிரமாகவும், சாதாரண வணிக கட்டடங்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.50 ஆயிரமாகவும், சிறப்பு வணிக கட்டடங்களுக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ.2 லட்சமாகவும், அடுக்குமாடி வணிக கட்டடங்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்