ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும் விஜய் "ஏ பா.ஜ.க. அரசே" என்று பொங்க மாட்டார்: எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார் என விஜய் குறித்து எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-09 11:27 IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளப்பதிவில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் குறித்து கூறியிருப்பதாவது:

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார். இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறி வைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார். காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.

கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ தி.மு.க. அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பா.ஜ.க. அரசே!" என்று பொங்க மாட்டார். எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள். பொங்கலோ பொங்கல்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்