போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் வட்டம், வி.கே.புரம் பகுதியை சேர்ந்த ஆனந்த செல்வம் என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார்.;

Update:2025-06-01 06:39 IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், வி.கே.புரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் ஆனந்த செல்வம் (வயது 30) என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார். இவர் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நேற்று (31.5.2025) ஆனந்த செல்வம் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்