பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்

Update:2025-09-13 14:38 IST
Live Updates - Page 2
2025-09-13 09:53 GMT

அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும், எம்.ஜி.ஆர். முதல் மாநில மாநாட்டை நடத்தியதும் திருச்சியில்தான். போருக்குமுன் குலதெய்வத்தை வணங்குவதைபோல அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்குமுன் மக்களை பார்க்க வந்துள்ளேன் - விஜய்

2025-09-13 09:50 GMT

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? - விஜய் கேள்வி

வாக்குறுதிகளை நிறைவேற்றத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? என்று தொண்டர்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார். விஜய் கேட்டதற்கு இல்லை... இல்லை... என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

2025-09-13 09:46 GMT

விஜய் பேச்சு: தொழில்நுட்ப கோளாறு

தவெக தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது மைக் பிரச்சினையால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விஜய்யின் பேச்சு தொண்டர்களுக்கும், தொலைக்காட்சியிலும் சிறிதுநேரம் கேட்கவில்லை

2025-09-13 09:43 GMT

அந்த காலத்தில் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதேபோல்தான் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலுக்கு திருச்சியில் இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன் - தவெக தலைவர் விஜய்

2025-09-13 09:33 GMT

திருச்சியில் காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். பிரசார வாகனத்தின்மீது நின்றவாறு விஜய் உரையாற்றி வருகிறார்.

அவர் பேசியதாவது, திருச்சியில் தொடங்கும் எல்லாம் திருப்புமுனையாக அமையும். மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் திருச்சி’ என்றார்

2025-09-13 09:14 GMT

மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார். தவெக தலைவர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான மரக்கடை பகுதியில் குவிந்துள்ளனர். 

2025-09-13 09:08 GMT

பிரசாரத்தை தொடக்கிய விஜய்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். விஜய் பிரசாரத்திற்காக நவீன பஸ்சை பயன்படுத்தியுள்ளார்.

அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் இன்று திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் பிரசார வாகனத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை முன் பிரசார உரையை தொடங்குகிறார். காலை 10.30 மணிக்கு மரக்கடை பகுதிக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் காரணமாக பயணம் 4 மணிநேரம் தாமதமானது. இதையடுத்து, மதியம் 2.30 மணி அளவில் மரக்கடை பகுதியை வந்தடைந்தார். அவர் சற்று நேரத்தில் மக்களிடையே உரையாற்றுகிறார்.   

Tags:    

மேலும் செய்திகள்