கொடைக்கானல் வனப்பகுதியில் வனவிலங்கிடம் அத்துமீறல்
கொடைக்கானலில் காட்டெருமையின் வாலை இழுத்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர். அங்கு விலங்கு - மனித மோதல் அதிகரித்துவரும் நிலையில், இச்செயலுக்கு வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபடியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீராங்கனை
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் கபடி அணி. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 75-21 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
உதகையில் 4வது புத்தகக் கண்காட்சி
உதகையில் 4வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி வரும் நவம்பர் 2ம் தேதி வரை நடக்க உள்ள கண்காட்சியில் 50 அரங்குகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்
சென்னை பல்லாவரம் வாரச்சந்தையில் நடந்த சோதனையில், காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்த நபர், பொருட்களை காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல்
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா, அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆந்திர பேருந்து விபத்து - ரூ.5 லட்சம் நிவாரணம்
கர்னூல் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணத்தை தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
நாளை மஞ்சள் அலர்ட்
செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
சென்னை, புழுதிவாக்கம் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவியை மாப்பு கட்டையால் தாக்கிய தலைமை ஆசிரியை இந்திரா காந்தியை சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
இந்த நிலையில், வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 26-ம் தேதி (நாளை மறுநாள்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 27-ம் தேதி புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு உருவாகும் புயலுக்கு 'மோன்தா' (Montha) என பெயரிட தாய்லாந்து பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 27-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது