பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலெட்சுமி நேற்று உடல்நல குறைவால் காலமானார். விஜயலட்சுமி உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பெண் குழந்தை மீட்பு
சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தையை நாமக்கல்லில் மீட்டது காவல்துறை. தாயுடன் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தையை கடத்தி சென்ற ரமேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நயன்தாராவின் ஆவணப் படத்துக்கு மீண்டும் சிக்கல்!
நடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்தத் தடை கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை ஐகோட்ர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் சந்திரமுகி காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், மேலும் அதன்மூலம் கிடைத்த லாபத்திலிருந்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் முடிவில், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் 22-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 22.9.2025 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (செப்.10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருமண நிதியுதவி திட்டம்: தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர்
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையால் செயல்படுத்தப்படும் 4 திருமண நிதியுதவி திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஏழைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்கள் ஆகியோருக்கு வழங்க 22 காரட்டில் 8 கிராம் தங்க நாணயங்கள் ரூ.45 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம்: பொள்ளாச்சியில் பரபரப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மதுரையில் நாளை மதுக்கடைகள் செயல்படாது - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை (11-ந்தேதி) அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
'கூலி' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
தற்போது. 'கூலி' படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், உலக அளவிலான வசூல் விவரம் வெளிவந்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.675 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வட அமெரிக்காவில் மட்டும் 6.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.56 கோடியை வசூல் செய்துள்ளது. அங்கு கமல்ஹாசன் படம்தான் இதுவரை அதிகம் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்போது அந்த சாதனையை 'கூலி' முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடலின் நிலையற்ற தன்மை காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.