இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

Update:2025-09-12 09:02 IST
Live Updates - Page 5
2025-09-12 05:40 GMT

10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது அமேசான் நிறுவனம்


பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசானும் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் வகையில் அமேசான் நவ் என்ற சேவையை தொடங்கியது. அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் நோக்கில் பெங்களூருவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டது.


2025-09-12 05:39 GMT

புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்புகள்


மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள். பிரமோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

2025-09-12 05:36 GMT

சாம்சன் 5-வது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ் ஐயருக்கான வழியை... - இந்திய முன்னாள் வீரர்


சாம்சன் 5-வது வரிசையில் பேட்டிங் செய்வது ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவதற்கான வழியை உருவாக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவே சாம்சனுக்கான கடைசி வாய்ப்பு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


2025-09-12 05:35 GMT

‘ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்’ - நேபாள முன்னாள் பிரதமர்


நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என தகவல் வெளியான நிலையில், தான் தற்போது வடக்கு காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவத்தின் ஷிவ்புரி முகாமில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக சர்மா ஒலி, இந்து கடவுள் ராமரின் பிறப்பிடம் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும், அவர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

2025-09-12 05:32 GMT

ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்


இசையமைப்பாளரான அனிருத் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் கொடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்ததும் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


2025-09-12 05:07 GMT

அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்


மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


2025-09-12 05:05 GMT

பந்துவீச்சில் முன்னேற அவர் முக்கிய காரணம் - ஷிவம் துபே


தம்முடைய பந்துவீச்சில் முன்னேற பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முக்கிய காரணம் என்று ஷிவம் துபே தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல்.-ல் இம்பேக்ட் வீரராக களமிறங்கியதால் பந்து வீச அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


2025-09-12 05:04 GMT

'லோகா' படத்தின் முக்கிய அறிவிப்பு.. இன்று மாலை வெளியாகிறது


திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள லோகா திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புகளை "தி வேர்ல்ட் அப் லோகோ ரிவீல்ஸ் இட்ஸ் சீக்ரெட்ஸ்" (The world of Lokah reveals its secrets) என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 'லோகா' யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.


2025-09-12 05:02 GMT

தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்


பல ஆண்டுகளாக. சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல் மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி வருகிறார்.


2025-09-12 04:48 GMT

15-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்


துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா, தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கிறனர். 

Tags:    

மேலும் செய்திகள்