ஆல் டைம் சிறந்த டி20 பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரோவ்மன் பவல்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்
பவல் தேர்வு செய்த அணியில் சூர்யகுமார் யாதவ், பிராவோ, ரெய்னா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை.
மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசுக்கு நன்றி! - நயினார் நாகேந்திரன்
கூடுதலாக மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒரு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கூட இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
'குஷி' படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
குஷி திரைப்படம் தரம் உயர்த்தப்பட்ட 4 தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது. வருகிற 25ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஷி பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைந்தார் - எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைந்தார். 10 ஆண்டுகள் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
NDA கூட்டணியில் இருப்பதாகவும், கூட்டணியின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் ஏற்கெனவே டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து ஊடகங்கள் வாயிலாக வந்தது. தற்போது திடீரென கருத்தை மாற்றிக் கொண்டார்.
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என அமித்ஷா ஏற்கெனவே கூறிவிட்டார்.
ஒரு முதல்-அமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார், இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல. கடந்த 16 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன். அதை எடுத்து அரசியல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கை குட்டையால் நான் முகத்தை மறைத்தேனா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகம், பத்திரிக்கை மக்கள் இடத்திலே காண்பித்து விட்டனர்.
பிறகு உள்துறை அமைச்சரை சந்திக்கும் போதும் நானும் கட்சி நிர்வாகிகளும் அரசாங்க காரில் தான் சென்று அவரை சந்தித்தோம். சந்தித்துவிட்டு அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். நான் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியேறினேன். அப்போது காரில் ஏறுவதற்கு முன் முகத்தை துடைக்கிறேன் அப்போது அதை வைத்து அரசியல் செய்வது வேதனையாகவும் உள்ளது.
பரபரப்பான செய்தி கிடைக்க வில்லை என்ற அடிப்படையில் இதை செய்தியாக வெளியிடுவது ஏற்புடையதா. முகத்தை துடைக்கிறேன் இதில் என்ன அரசியல் இருக்கிறது. என்று கேள்வி எழுப்பினார்.
ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வாக்குத்திருட்டு தொடர்பான எனது குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீதம் ஆதாரம் உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் ஷாகித் அப்ரிடியை சமன் செய்த சைம் அயூப்
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன சைம் அயூப் 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். நடப்பு ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் அனைத்திலும் டக் அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது. ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும்தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து
இயக்குநர் வசந்தின் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான படம் 'ரிதம்'. இந்த படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படம் இன்றைக்கும் மறக்க முடியாத படமாக உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடலுக்கும் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்த ரிதம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து நீக்கி உள்ளனர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-
வாக்கு திருட்டை மறைக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார். அவருக்கு எதிராக எங்களிடம் ஆதாரம் உள்ளது. ஆதாரமின்றி எதையும் கூறவில்லை. எதிர்க்கட்சி என்பதால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகிறேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து நீக்கி உள்ளனர். வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி கர்நாடக வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. கோதாபாய் என்ற பெயரில் போலியாக ஒரு Login-ஐ உருவாக்கி 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பித்து உள்ளார். ஆனால் தனது பெயரில் விண்ணப்பம் அளித்தது தெரியாது என கோதாபாய் பேட்டி அளித்துள்ளார்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.