ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா 136/9 (26 ஓவர்கள்)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து உள்ளது.
"தமிழ்நாட்லயும் இருக்கு..." - ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்த பின் ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், காந்தாரா பட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
முதல் நாளை விட 2-வது நாளில் அதிகம் வசூலித்த ’டியூட்’...எவ்வளவு தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் இன்று (19-10-2025) கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: உயிர்தப்பிய 109 பயணிகள்
சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரியான நேரத்தில் கண்டுபிடித்த விமானியால் 109 பயணிகள் உயிர்தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.23ம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
வரும் அக்டோபர் 23ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்.21, 22, 24ம் தேதிகளில் சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்: மீண்டும் தொடங்கியது
மழையால் நிறுத்தப்பட்ட ஆட்ட,ம் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. தற்போது போட்டி 32 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதலிடம்
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
பெர்த்தில் விளையாடும் மழை : இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் பாதிப்பு
பின்னர் கேஎல் ராகுல் களமிறங்கினார். இந்திய அணியில் அக்சர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடினர். இந்திய அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்க வேண்டும்.