இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

Update:2025-09-21 09:10 IST
Live Updates - Page 6
2025-09-21 04:06 GMT

ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்த பாக்.


'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


2025-09-21 04:04 GMT

ஆசிய கோப்பை: ரன் குவிக்க தடுமாறும் சுப்மன் கில்.. இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்


இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லின் பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த அவர் நடப்பு ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்து அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

2025-09-21 04:03 GMT

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. அதே உத்வேகத்தை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.


2025-09-21 04:01 GMT

வாஷிங்டன் டி.சி. அழகாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது; தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட டிரம்ப்


வாஷிங்டன் டி.சி.க்கு செல்லுங்கள். உருவாக்கி வைக்கப்பட்ட வரலாற்றை அனுபவித்து மகிழுங்கள் என டிரம்ப் பகிர்ந்துள்ளார்.


2025-09-21 04:00 GMT

`எச்1-பி' விசா கட்டணம் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு


அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்து உள்ளார். அதாவது வெளிநாட்டினருக்கான எச்1-பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்து போட்டார். பின்னர் அவர், 'இந்த நடவடிக்கை அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறினார்.


2025-09-21 03:57 GMT

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது - மம்முட்டி சொன்ன வார்த்தை


இந்தியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக மோகன்லாலுக்கு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


2025-09-21 03:56 GMT

"விஜயம் யார் வேண்டுமானால் செய்யலாம், ஆனால்... - நடிகர் பார்த்திபன்


கோவையில் நடைபெற்ற 'இட்லி கடை' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் பார்த்திபன் அரசியல் குறித்து கவிதை சொன்னது இணையத்தில் வைரலாகி வருகிறது.


2025-09-21 03:54 GMT

கவினுக்கு வெற்றி கிடைத்ததா? - ''கிஸ்'' சினிமா விமர்சனம்


வழக்கமான காதல் கதை என்றாலும், புதுமையான விஷயங்களை புகுத்தி இயக்குனராக தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் சதீஷ்.


2025-09-21 03:51 GMT

காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம். ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-09-21 03:49 GMT

குலசை தசரா திருவிழா: பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்


இந்த ஆண்டிற்கான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா நாளை மறுதினம் (23-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் விழா அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தசரா திருவிழாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்