இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

Update:2025-06-29 09:16 IST
Live Updates - Page 2
2025-06-29 08:30 GMT

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் - மதிமுக

2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என மதிமுக நிர்வாக குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபன், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு கண்டனம், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2025-06-29 08:15 GMT

திருமணம் செய்வதாக கூறி 5 வருடங்கள் ஏமாற்றிய யாஷ் தயாள்..? பெண் பரபரப்பு புகார்


அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஒருவருடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்


2025-06-29 08:11 GMT

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்


வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை என்று மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.


2025-06-29 08:10 GMT

திருப்புவனம் இளைஞர் மரணம்: "நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை.." - அண்ணாமலை

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-06-29 07:41 GMT

அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நன்மை தரும் - பிரேமலதா விஜயகாந்த்


செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2026 ஜனவரி 9ம் தேதி கடலூர் மாநாட்டில் தெரிவிக்கப்படும்.

சட்டமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் கூட்டணியில் தலைமை வகிப்பதே சிறந்தது. கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்” என்று அவர் கூறினார்.

2025-06-29 07:38 GMT

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு


பா.ஜனதா தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் வி.பி.ராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாநில பாஜக தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்த நிலையில் வி.பி.ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 


2025-06-29 07:13 GMT

ஜெயலலிதா படம் அவமதிப்பு - கண்டனம் தெரிவித்த அதிமுக


அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-06-29 07:11 GMT

மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு


கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் நிரூபிக்கப்படுகிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


2025-06-29 06:40 GMT

ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்; கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண்


உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு குழுவில் இணையவுள்ள கமல்ஹாசனுக்கு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், ஆந்திர மாநில துணை-மந்திரி பவன் கல்யாண் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தன எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


2025-06-29 06:38 GMT

திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ என்ற சந்தேகம் எழுகிறது..? - நயினார் நாகேந்திரன்



பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்