இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

Update:2025-02-03 08:54 IST
Live Updates - Page 2
2025-02-03 07:01 GMT

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு


திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் அவசர முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் அதனை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 


2025-02-03 06:57 GMT

வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-02-03 06:16 GMT

டி20 கிரிக்கெட்: 2-வது பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த ஜோப்ரா ஆர்ச்சர்

இந்திய அணிக்கு எதிரான தொடர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் பந்துவீச்சில் மொத்தம் 14 சிக்சர்களை வாரி வழங்கினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் வழங்கிய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆர்ச்சர் படைத்துள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவின் நிகிடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு தொடரில் 16 சிக்சர்கள் வழங்கி முதலிடத்தில் உள்ளார்.


2025-02-03 06:12 GMT

பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ்

உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ .விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


2025-02-03 05:50 GMT

அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


2025-02-03 05:48 GMT

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


2025-02-03 05:38 GMT

ஏடிஜிபி குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப்படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?

இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 


2025-02-03 05:35 GMT

இனி டி20 போட்டிகளில் இதுதான் எங்களது ஸ்டைல் - இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள். அதையே நாங்கள் விரும்புகிறோம். இனிவரும் டி20 தொடர்களிலும் இதுதான் எங்களது ஸ்டைலாக இருக்கும். எப்போதுமே டி20 போட்டிகளில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்கும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.


2025-02-03 05:32 GMT

"வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்றும் நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப பயணத்தில் வெல்ல பாடுபடுவோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

2025-02-03 05:02 GMT

வக்பு வாரிய திருத்த மசோதா : நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்


வக்பு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. குழுவின் தலைவர் ஜெகதம்பிகா பால் நாடாளுமன்றத்தில் இதனை தாக்கல் செய்ய உள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்