இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

Update:2025-05-03 09:03 IST
Live Updates - Page 3
2025-05-03 05:17 GMT

கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்


கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோவிலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


2025-05-03 05:16 GMT

'ஜனநாயகன்'படத்தில் வாய்ப்பு..."உதவி இயக்குனர் ஏமாத்திட்டாங்க" - நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ


விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, அப்படத்தின் உதவி இயக்குனரால் அலைக்கழிக்கப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி வீடியோ பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


2025-05-03 04:01 GMT

ரன் அவுட் சர்ச்சை: நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்


சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 76 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். 


2025-05-03 03:55 GMT

நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு


2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1% லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது


2025-05-03 03:53 GMT

கோடை விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு


தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும். உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர். ரெயில் மற்றும் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


2025-05-03 03:52 GMT

விஜய்யை பார்க்கச் சென்ற காவலர் 'சஸ்பெண்ட்'


விஜய்யை பார்ப்பதற்காக பணி நேரத்தில் அனுமதி கேட்டு சென்ற காவலர், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வீடியோ ஆணையர் லோகநாதனின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து, காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


2025-05-03 03:51 GMT

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், “உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வேவ்ஸ் ஒரு சிறந்த தளமாக இருக்கும். நம்முடைய மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு நாம் எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். தொழில்நுட்பமும், பாரம்பரியமும் இணைந்து பயணிப்பது என்பது தற்போதைய காலத்தில் அவசியமானது” என்று கூறினார். 


2025-05-03 03:48 GMT

கோவா: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி


கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


2025-05-03 03:46 GMT

"ஸ்பைடர் மேனாக சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்காவாக..": வைரலாகும் நானியின் மார்வெல் லிஸ்ட்


அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் பெயர்களை ஸ்ரீநிதி ஷெட்டி ஒவ்வொன்றாக கூற, அதற்கு சரியாக இருக்கும் நடிகர்களின் பெயர்களை நானி கூறினார்.


2025-05-03 03:45 GMT

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்


இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்