சென்னை அருகே அம்பத்தூரில் பெண் ஐடி ஊழியர் பூர்ணிமா (வயது 25) பஸ் மோதி உயிரிழந்தார். அம்பத்தூரில் இருந்து தொழிற்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்ட்டுள்ளது. இருசக்கர வாகனத்தின் பிரேக் பிடித்தபோது சறுக்கிய வாகனம் பின்னால் வந்த பஸ் மோதியதில் உயிரிழந்தார். விபத்தால் அம்பத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஈரோடு அருகே கோபிச்செட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் இரவில் வீசிய சூறைக்காற்றால் ஆலமரம் ஒன்று வேறோடு சாய்ந்து இருக்கிறது. இதனால் 15க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், சூரியம்பாளையம், எம்மாம்பூண்டியில் இரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கள்ளக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தர்பூசணிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், இதுவரை இல்லாத வகையில் தர்பூசணியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் பழங்கள் நிலத்திலேயே அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை இல்லாதது வேதனை அளிக்கிறது. மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
சென்னையில் 3 வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ,200 குறைந்து சவரன் ரூ.66,280க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.25க்கு குறைந்து ரூ.8,285க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்து 24 வயது இளம்பெண் உயிரிழந்தார். வருங்கால கணவருடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்து செல்லும் நிலையில் அதிமுக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரம் வீணடிக்க விரும்பவில்லை. அதிமுகவில் எந்த ஒரு உட்கட்சி பிரச்சனையும் இல்லை. செங்கோட்டையன் குறித்து விரைவில் ஈபிஎஸ் பேசுவார் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.