இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

Update:2025-12-17 08:43 IST
Live Updates - Page 4
2025-12-17 04:18 GMT

தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் 


ஈரோட்டிற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு யார் முதலில் மாலை போடுவது என்பதில் தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை போட வந்த நிர்வாகியை மற்றொரு நிர்வாகி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஆனந்த் உடனே இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2025-12-17 04:17 GMT

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா மீண்டும் புகார் 


ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார்.

2025-12-17 04:11 GMT

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! 


தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,400-க்கும், சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11-ம், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.222-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025-12-17 03:33 GMT

நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்தது: மத்திய அரசு தகவல் 


வேலை செய்யத் தயாராகவும், வேலை தேடியும் இருப்பவர்கள் இருந்தும், அவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்காத நிலையே வேலைவாய்ப்பில்லாத நிலை எனப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முக்கிய குறியீடுகளில் ஒன்று.

2025-12-17 03:31 GMT

பிரேசில்: வீசிய பலத்த புயல் காற்று.. உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை 


முதலில் சிலை விழுந்த வீடியோவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகவே பலரும் நினைத்தனர்.

2025-12-17 03:30 GMT

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இன்று முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு 


திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரும் ரெயிலில் நாளை முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.

2025-12-17 03:29 GMT

திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு 


திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.

2025-12-17 03:28 GMT

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 


கடந்த 14-ந்தேதி மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார்.

2025-12-17 03:27 GMT

10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் 


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கண்டிப்பாக அதிகரித்து காட்ட வேண்டும் என்ற முனைப்பில் பள்ளிக்கல்வித் துறை களம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல மாவட்டங்கள் தேர்ச்சி சதவீத பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தன. தலைநகராம் சென்னை தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது.

2025-12-17 03:26 GMT

இந்தியில் மசோதாக்களின் பெயர்கள்: ப.சிதம்பரம் கண்டனம் 


இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை எதிர்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்