தமிழகத்தில் 24-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் 24-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
‘அனகோண்டா’ படத்தின் பைனல் டிரெய்லர் வெளியானது
டாம் கோர்மிகன் இயக்கிய ‘அனகோண்டா’ படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் உள்பட 24 பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம்
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
தாய்க்கு கொடுத்த வாக்குறுதி.. லட்சக்கணக்கான மரங்களை நட்டு வரும் வில்லன் நடிகர்
மரம் நடுவதற்கென தனி அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் மூலம் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
தொடரும் ஸ்னிக்கோ மீட்டர் சர்ச்சை: வீரர்கள் ஆதங்கம்
கிரிக்கெட் போட்டிகளில் பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் கையுறையில் பட்டதா? இல்லையா என்பதை கண்டறிய ஸ்னிக்கோ மீட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக நடைபெற்று வரும் ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 72 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பித்து சதமும் அடித்து விட்டார்.
3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு. தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
"நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!"- செல்வராகவனின் பதிவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் ஒரு கிசுகிசு கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.
காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்” என்று அவர் கூறினார்.
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.