இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

Update:2025-04-20 09:17 IST
Live Updates - Page 2
2025-04-20 10:27 GMT

ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரைவைகோ. மல்லை சத்தியாவும், துரை வைகோவும் ஒன்றாக இணைந்து கட்சி பணிகளில் ஈடுபட வைகோ வலியுறுத்தி உள்ளார்.

2025-04-20 10:00 GMT

மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தலை தொடர்ந்து, தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-04-20 09:31 GMT

விடுமுறை நாளையொட்டி அண்ணாமலையார் கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

2025-04-20 09:05 GMT

எங்கள் முதல்-அமைச்சர் அடுத்த வீட்டு பிரச்சினைகள் குறித்து பேசக் கூடாது என சொல்லியிருக்கிறார். அதனால் மதிமுகவில் நடப்பதை பற்றி நான் கருத்து சொல்ல எதுவுமில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

2025-04-20 08:22 GMT

திருப்பதிக்கு பக்தர்கள் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகை வரும்போதே சுதாரித்து ஓட்டுநர், பக்தர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

2025-04-20 08:17 GMT

அருப்புக்கோட்டையில் 2 நாட்கள் முன்பு ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர் தவறி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

2025-04-20 08:15 GMT

மதுரையில் நடைபெற்ற அதிமுக ஐடி விங் நிகழ்ச்சியில் ஜெயல‌லிதாவின் உருவ பொம்மை வாசலில் வரவேற்பு பொம்மையாக வைக்கப்பட்ட‌து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2025-04-20 08:14 GMT

தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! இலட்சியப் பயணத்தில் வெல்வோம்! என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2025-04-20 08:12 GMT

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கிரேனில் இருந்து இயந்திரம் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார். வளையாம்பட்டில் தோல் தொழிற்சாலை உள்ளே ராட்சத இயந்திரத்தை கிரேன் மூலம் தூக்கியபோது விபத்து ஏற்பட்டது. கிரேன் பெல்ட் அறுந்ததால் ராட்சத இயந்திரம் கீழே விழுந்ததில் தொழிலாளி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2025-04-20 07:13 GMT

பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. டெம்போ வாகன ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்