இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025

Update:2025-11-21 08:51 IST
Live Updates - Page 3
2025-11-21 07:15 GMT

சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை 


இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-11-21 07:13 GMT

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்


மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2025-11-21 06:51 GMT

ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து...முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது 


இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரெண்டன் டாக்ட் 2 விக்கெட்டும், கிரீன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

2025-11-21 06:49 GMT

'வாரணாசி' பட விழாவில் பாடிய சுருதிஹாசன்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்திலும், 'கும்பா' என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர்.

2025-11-21 06:48 GMT

நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய அடவிநயினார் அணை 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் மலையடிவார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

2025-11-21 06:47 GMT

வங்காளதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதி


வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

2025-11-21 06:45 GMT

’தாயாக ஆசை இல்லை...அது ஒரு பெரிய பொறுப்பு’ - பிரபல நடிகை 


சிலர் திருமணத்திற்குப் பிறகு உடனடியாக குழந்தைகளைப் பெற விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தைகளைப் பெறத் திட்டமிடுகிறார்கள். அதேவேளை, குழந்தைகளை விரும்பாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். இந்த நடிகையும் அப்படிபட்டவர்தான். அவர் வேறுயாரும் இல்லை. நடிகை அகன்ஷாதான். தனக்கு தாயாக ஆசை இல்லை என்று அகன்ஷா கூறினார்

2025-11-21 06:43 GMT

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1ஏ தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு 


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1ஏ தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

2025-11-21 05:50 GMT

திருமணம் நிச்சயம் ஆனதை வீடியோ மூலம் அறிவித்த ஸ்மிர்தி மந்தனா! 


பிரபல இசையமைப்பாளரான பலாஷ் முச்சால் என்பவரை ஸ்மிர்தி மந்தனா கரம் பிடிக்க உள்ளார்.

2025-11-21 05:48 GMT

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம்' - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் 


மதுரை, கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்