இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

Update:2025-04-26 09:02 IST
Live Updates - Page 2
2025-04-26 10:52 GMT

இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்


சென்னை அணியின் எதிர்கால வீரர்களை உருவாக்க இது சரியான நேரம் என்று இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ரச்சின் ரவீந்திர ஒரு அற்புதமான இளம் திறமைசாலி. ஆனால் இந்த வடிவத்தில், அவர் கொஞ்சம் அவசரப்படுவது போல் தெரிகிறது. ஒருவேளை 3-வது பேட்டிங் வரிசை அவருக்கு பொருத்தமாக இருக்கலாம். ஷிவம் துபேவை தவிர மிடில் ஆர்டரில் பலமான பேட்ஸ்மேன்கள் இல்லை. பிரெவிஸ் மற்றும் மாத்ரே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது நேர்மறையான விஷயம்" என்று அவர் கூறினார். 


2025-04-26 10:50 GMT

பஹல்காம் தாக்குதல், இந்து - முஸ்லீம் மோதல் அல்ல - காஜல் அகர்வால்


காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து முஸ்லீம் இடையேயான பிரச்னை கிடையாது. ஆனால் அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். அங்கு நடந்தது பயங்கரவாதத்துக்கும் மனிதநேயத்துக்குமான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம்.

பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்பு உணர்வையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒன்று பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


2025-04-26 10:48 GMT

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு


26-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


2025-04-26 10:46 GMT

மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு


பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துைறயில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன்கூடிய விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 17.4.2025 முதல் www.sdat.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


2025-04-26 10:44 GMT

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்


யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை kmy.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கணினி செயல்முறை மூலம் யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


2025-04-26 10:38 GMT

கோவையில் தொண்டர்கள் புடைசூழ கருத்தரங்குக்கு செல்லும் விஜய்

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க சொகுசு விடுதியில் இருந்து அக்கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார்.

அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்ட விஜயை கண்டு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

விடுதி வாசலில் காத்திருந்த நூற்றுக்கணக்கானவர்கள் விஜயை பார்த்து உற்சாகமாக குரலெழுப்பி ஆரவாரம் செய்தனர். இருசக்கர வாகனத்தில் விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். 

2025-04-26 10:10 GMT

போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி

வாடிகன் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி நடந்து வருகிறது.

இறுதி அஞ்சலி செலுத்த உலக தலைவர்கள் வாடிகனில் திரண்டுள்ளனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

2025-04-26 09:54 GMT

பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது என்ன நியாயம்? - சீமான்


நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்

பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது என்ன நியாயம்?

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியோரை இந்தியா தண்டிக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-04-26 09:48 GMT

போப் பிரான்சிஸ் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம்

மறைந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் சற்று நேரத்தில் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

போப் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்திற்கு அருகே கல்லறை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

2025-04-26 09:43 GMT

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வாடிகனில் போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அவரது உடலுக்கு நடைபெறும் திருப்பலியை காண உலக நாடுகளின் தலைவர்கள் திரண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்