கரூரில் என்ன நடந்தது? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர். 23-ம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது. தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
கூடலூர், நடுவட்டம், பைக்காரா, ஊட்டி பகுதிகளில் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் சமவெளியில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்து செல்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, தொடர் விடுமுறை காரணமாக சமவெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமுடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தாழ்வான பகுதியில் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றனர்.
விஜய் கூட்டத்தில் கல் வீச்சு எதுவும் இல்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
விஜய் பிரசார கூட்டத்தில் கல்வீச்சு இல்லை என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் அளித்த பேட்டியில் கூறினார்.
எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும் கூட்டம் தடுக்கும்போது காவல் துறை என்ன செய்ய முடியும்? என்றார். கூட்டம் அதிகரித்தது. அதனால், காயமடைந்த நபர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடியவில்லை என கூறினார்.
பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 126-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
அவர் இந்நிகிழ்ச்சியில் பேசும்போது, இந்த விழா காலங்களில் உள்நாட்டு பொருட்களை வாங்கி அர்த்தமுள்ள பண்டிகையாக அதனை உருவாக்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, உள்ளூர் பொருட்களை வாங்கி ஆதரவளிப்போம் என மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.
ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா சாப்டர் 1” முதல் பாடல் வெளியானது
கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா - சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கரூர் துயரம்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை என்னென்ன..?
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
''நெல்சன் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்'' - ''ஓஜி'' பட இயக்குனர்
ஆக்சன் படமான ''ஓஜி'' மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், 'நகைச்சுவை படங்களை' எடுக்க விரும்புவதாக சுஜீத் கூறினார்.
தவெக பிரசார கூட்டத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
தவெக பிரசார கூட்டத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.