புதிய மேகங்கள் உருவாகும்
புயல் இன்றிரவு சென்னையை நெருங்கும் போது புதிய மேகங்கள் உருவாகும். மேகங்கள் சென்னை அருகே உருவாகிறதா அல்லது நெல்லூர் அருகே உருவாகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் சமீபத்தில் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக இருந்த ரசல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
முஷ்டாக் அலி டி20: 32 பந்தில் சதமடித்த அபிஷேக் ஷர்மா..பஞ்சாப் அணி 310 ரன்கள் குவிப்பு
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.இதில் இன்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, பெங்கால் அணியை எதிர்கொண்டது.
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். வாக்காளர் படிவத்தை ஒப்படைக்க டிச.11 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். வாக்காளர் படிவத்தை ஒப்படைக்க டிச.11 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசம் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கின.
இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ம் தேதி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி; 10 பேர் காயம்
எப்.பி.ஐ. அதிகாரிகள், மதுபானம், புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுக்கான துறையை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த’ஜூடோபியா 2 ’
இந்த அனிமேஷன் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.