4-ந் தேதி மதுரையில் நடக்க இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மாநாடு ஒத்திவைப்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் மதுரை மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சீரியல் நடிகை...இப்போது ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்
ஒரு காலத்தில் சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இவர், மெதுவாக படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராகி இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர்தான் கதாநாயகி மிருணாள் தாகூர்.
ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர், தனக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியத்தை மீண்டும் கேட்டு, ராஜஸ்தான் அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வின் ஓய்வூதியம் ஒரு மாதத்திற்கு ரூ.35 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
தற்போது 74 வயதாகும் ஜெகதீப் தன்கருக்கு மாதம் ரூ.42 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அவர் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் எம்.பி. மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ. என 3 ஓய்வூதியங்களுக்கு தகுதியுடையவர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான தாக்குதலுக்கு பின் முதல்முறையாக சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கத் தடை
கனமழை காரணமாக ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி ஆற்றில் குளிக்கத் தடை விதித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
மத்திய அரசு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.பி.சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அடுத்த மாதம் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி? பரபரப்பு தகவல்
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
கறுப்புக்கொடி காட்டிய நபருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து, வாக்காளர் அதிகாரம் என்ற பெயரில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ந் தேதி முதல் யாத்திரை நடத்தி வருகிறார். சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரை, நாளை பாட்னாவில் நிறைவடைகிறது.
டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவுகிறதா..? - அச்சத்தில் மக்கள்
2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரபிரியங்கா(வயது 35). கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் பிராந்தியத்தில் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் அமைச்சர் அவர்தான். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது பதவி திடீரென பறிக்கப்பட்டது. தற்போது அவர் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்தநிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை நேற்று அவர் வெளியிட்டுள்ளார்.