தமிழ்நாட்டை மீண்டும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய கொள்கைப் பாதையில் வழிநடத்திட உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி

அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-01 10:47 IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சுதந்திர இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, நாடே வியக்கும் நம் உயிர்நிகர் தமிழ்நாடு நமக்கு கிடைத்த பொன்னாளான இந்நாளை, "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அதிமுக அரசு அறிவித்ததை பெருமையுடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடாம் நம் தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப்பிடியில் இருந்து மீட்டு, தமிழக மக்களைக் காத்திட்டு, பல தூய உணர்வாளர்களின் தியாகத்தால் நமக்கு கிடைத்த நம் தமிழ்நாட்டை மீண்டும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய கொள்கைப் பாதையில் வழிநடத்திட இந்நன்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்