தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மறுத்து விட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
x
Daily Thanthi 2025-08-15 08:18:26.0
t-max-icont-min-icon

தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மறுத்து விட்டு நாடகமாடுகிறார் முதல்-அமைச்சர் - அன்புமணி விமர்சனம்


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 நாள்களுக்கும் மேலாக போராடியத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத. அவர்கள் மீது நள்ளிரவில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது தூய்மைப் பணியாளர்களின் ஆபத்பாந்தவனாக வேடம் தரித்து நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில்கூட முதல்-அமைச்சர் இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


1 More update

Next Story