குளிர்கால கூட்டத் தொடர்:  மக்களவை சபாநாயகர் ஓம்... ... எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
x
Daily Thanthi 2024-11-25 06:24:10.0
t-max-icont-min-icon

குளிர்கால கூட்டத் தொடர்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

வக்பு (திருத்த) மசோதா, 2024 இல் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்கள் நிலுவையில் இருப்பதால், கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தில், “வக்பு திருத்த மசோதா, தற்போதுள்ள சட்டத்தில் பல பெரிய மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும் பகுதியை பாதிக்கும். எனவே, அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு வெறும் மூன்று மாத கால அவகாசம் போதுமானதாக இல்லை என்பது மட்டுமல்லாமல், முறையற்ற பரிந்துரைகளையும் விளைவிக்கலாம்” என்று அதில்; தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story