மலேசியாவில் ரேஸர் அஜித்குமார் உடன் நடிகர் சிம்பு


Actor Simbu with Ajith Kumar in Malaysia
x

அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

சென்னை,

அஜித் ‘குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பது தெரிந்த கதை. இது அஜித்குமாரின் 64-வது படமாகும்.

கார் பந்தய வீரரான அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அது முடிந்ததும் புதிய படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மலேஷியாவில் அஜித் பங்கேற்கும் ரேஸ் சர்க்யூட்டிற்கு அவரை சந்திக்க சிம்பு வந்திருக்கிறார். அஜித்தின் ரேஸிங் அணியின் ஜெர்ஸியை அணிந்து வந்த அவரின் வருகையால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1 More update

Next Story