''கூலி'' - ''அந்த கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க வேண்டியது, ஆனால்...''- லோகேஷ் கனகராஜ்

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இணைந்து உருவாக்கியுள்ள ''கூலி'' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இயக்குனர் லோகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில், சவுபினின் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது என்றும், ஆனால், கால் சீட் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை என்றும் கூறினார். அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கும் மேலாக செலவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பகத்தால் ''கூலி'' படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், ரஜினிகாந்துடன் ''வேட்டையன்'' படத்தில் நடித்திருந்தார்.
பல நட்சத்திரங்கள் நிறைந்துள்ள கூலி படத்தில் உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.






