இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!


இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!
x

இளையராஜா ‘வேலியன்ட்’ என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார்.

சென்னை,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இவரது இசையில் வெளியான ''விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 'வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story