“மனிதன் மனிதன்” பாடல் “மனிதன்” படத்தில் இடம்பெற ரஜினியே காரணம் - வைரமுத்து

ரஜினியின் ‘மனிதன்’ படம் 38 ஆண்டுகள் கழித்து, கடந்த 10ம் தேதி ரீ-ரிலீஸானது.
“மனிதன் மனிதன்” பாடல் “மனிதன்” படத்தில் இடம்பெற ரஜினியே காரணம் - வைரமுத்து
Published on

1987ம் ஆண்டு வெளிவந்து 25 வாரங்கள் தியேட்டரில் ஓடி வெற்றி பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த மனிதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி உடன் சோ, வினு சக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்தனர். ஏவிஎம் தயாரித்தது. சந்திர போஸ் இசையில் இதில் இடம்பெற்ற மனிதன் .... மனிதன், வானத்த பாத்தேன்..., காளை... காளை.., ஏதோ நடக்கிறது ..., முத்து முத்து பெண்ணே... ஆகிய பாடல்கள் ஹிட்டாகின. 

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.ரஜினி சினிமாவில் பொன்விழா ஆண்டினை கொண்டாடி வருகிறார். அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு மனிதன் திரைப்படத்தினை டிஜிட்டல் முறையில் மாற்றி 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் மனிதன் படத்தை இப்போது ரிலீஸ் செய்கிறது.

சந்திரபோஸ் இசையமைத்திருந்த மனிதன் படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கும் மனிதன் மனிதன் என்ற பாடல் மனிதன் படத்தில் இடம்பெற்றிருந்தது. அதற்குக் காரணம் ரஜினிகாந்த் என்று சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

இது குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மனிதன் பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com