லெக்கிங்ஸ் அணியும்போது கவனிக்க வேண்டியவை
தொழில்முறை சந்திப்புகளுக்கு லெக்கிங்ஸ் அணிவதைத் தவிர்ப்பது சிறந்தது. அலுவலகத்துக்கு லெக்கிங்ஸ் அணியும்போது, இரண்டு பக்கமும் ‘கட்’ இருக்கும் ‘டாப்ஸ்’ அணிவதைத் தவிர்க்கவும்.
கல்லூரி முதல் பணியிடங்கள் வரை இளம் பெண்கள் விரும்பி அணியும் ஆடை லெக்கிங்ஸ். இதை சரியான முறையில் அணியும்போது, உங்கள் தோற்றம் மேம்படும். அதேசமயம் பொருத்தமில்லாத வகையில் லெக்கிங்ஸ் அணிவது பெண்களை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாக்கும். எனவே லெக்கிங்ஸ் அணியும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.
தளர்வான டாப்ஸ் அணியும்போது லெக்கிங்ஸ் பொருத்தமாக இருக்கும். அம்ரெல்லா, அனார்கலி வகை ஆடைகளுக்கு லெக்கிங்ஸ் சிறந்த தேர்வாகும். பிட்டிங்கான டாப்ஸ் அணியும்போது லெக்கிங்க்ஸை தவிர்க்கவும்.
சரும நிறம் மற்றும் வெளிர் நிறங்களில் லெக்கிங்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் லெக்கிங்ஸ் துணி மெல்லியதாக இல்லாமல் சற்றே தடிமனாக இருக்கும்படி வாங்கவும். இதனால் உள்ளாடைகள் வெளியே தெரிவதைத் தவிர்க்க முடியும்.
டுயூனிக் அல்லது குட்டையான சட்டைகள் மற்றும் டாப்ஸ் அணியும்போது லெக்கிங்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. முழங்கால் நீளமுள்ள உடைகள் அணியும்போது லெக்கிங்ஸ் பொருத்தமாக இருக்கும்.
டிசைன்கள் எதுவும் இல்லாத கருப்பு மற்றும் வெள்ளை நிற லெக்கிங்ஸ் அணிவது ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதேசமயம் அவை மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும். எனவே சிறு சிறு டிசைன்கள் மற்றும் பூக்கள் அச்சு செய்யப்பட்ட லெக்கிங்ஸ் அணியலாம்.
தொழில்முறை சந்திப்புகளுக்கு லெக்கிங்ஸ் அணிவதைத் தவிர்ப்பது சிறந்தது. அலுவலகத்துக்கு லெக்கிங்ஸ் அணியும்போது, இரண்டு பக்கமும் 'கட்' இருக்கும் 'டாப்ஸ்' அணிவதைத் தவிர்க்கவும்.
உங்கள் உடலுக்கு சரியாகப் பொருந்தும் அளவு கொண்ட லெக்கிங்ஸை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. மிகவும் தளர்வாக அல்லது இறுக்கமாக இருக்கும் லெக்கிங்ஸ் அணியும்போது, அது மற்றவர்களின் பார்வையை ஈர்க்கக்கூடும்.
தரமான லெக்கிங்ஸ் வாங்குவது முக்கியமானது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், தரமானதை தேர்ந்து எடுங்கள்.
லெக்கிங்ஸ் அணியும்போது காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். உயரம் குறைவாக இருப்பவர்கள் தட்டையான காலணிகளைத் தவிர்த்து, 'வெட்சஸ்' வகை காலணிகளை அணியலாம்.
'கோட்' வகை ஆடைகளுக்கு லெக்கிங்ஸ் அணிவது பொருத்தமாக இருக்கும்.
நீளமான குர்த்தி, போகோ டாப்ஸ் போன்றவற்றுக்கு முழுநீள லெக்கிங்ஸ் அணியலாம். நீளம் குறைந்த டாப்ஸ் அணியும்போது, கெண்டைக்கால் நீளமுள்ள லெக்கிங்ஸ் அழகாக இருக்கும். டுயூனிக், கோட் வகை ஆடைகளுக்கு கணுக்கால் நீளமுள்ள லெக்கிங்ஸ் அணியலாம். ஜிம், யோகா, நடைப்பயிற்சி, உடற்
பயிற்சி, மலையேற்றம் போன்றவற்றுக்கு முழங்கால் நீளமுள்ள லெக்கிங்ஸ் அணிவது பொருத்தமாக இருக்கும்.