புரோக்கோலி டிக்கி


புரோக்கோலி டிக்கி
x
தினத்தந்தி 2 July 2023 1:30 AM GMT (Updated: 2 July 2023 1:30 AM GMT)

சுவையான புரோக்கோலி டிக்கி, புரோக்கோலி 65 ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

புரோக்கோலி டிக்கி

தேவையான பொருட்கள்:

புரோக்கோலி - 250 கிராம்

கேரட் - 2

கடலை மாவு - 3 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

ரவை - 1 மேசைக்கரண்டி

எள் - 2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி

சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1 (பெரியது)

இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டின் மேல் தோலை நீக்கி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். சூடான தண்ணீரில் புரோக்கோலியை போட்டு 10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து சுத்தம் செய்த பின்பு துருவிக்கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் துருவிய புரோக்கோலி, கேரட், வெங்காயம், இஞ்சி, பூண்டு, எள், அரிசி மாவு, கடலை மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், சில்லி பிளேக்ஸ், ரவை, கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றுடன் சிறிது எண்ணெய் ஊற்றி வடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். பின்னர் அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு அந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து கட்லெட் வடிவத்தில் தட்டையாக செய்து கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்திருக்கும் புரோக்கோலி மசாலாவை அதில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க வறுத்து எடுக்கவும். இதற்கு குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதும். இப்பொழுது சுவையான 'புரோக்கோலி டிக்கி' தயார். இதை தக்காளி சாஸ் மற்றும் புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

புரோக்கோலி 65

தேவையான பொருட்கள்:

புரோக்கோலி (சுத்தம் செய்து நறுக்கியது) - 1 கப்

மைதா மாவு - 2 மேசைக்கரண்டி

சோள மாவு - 2 மேசைக்கரண்டி

இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்

கரண்டி

கரம் மசாலாத்தூள் - ½ தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புரோக்கோலி, எண்ணெய் இவற்றை தவிர மற்ற பொருட்களை எல்லாம் அகலமான பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். அதில் புரோக்கோலி துண்டுகளை கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்த புரோக்கோலி துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது புரோக்கோலி 65 தயார்.


Next Story