நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
x

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து புஷ்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கன்னியாகுமரி

மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் பக்தர்கள் அனுமன் ஜெயந்தியாக (ஆஞ்சநேயர் ஜெயந்தி) கொண்டாடி வழிபடுவர்.

அதேபோல் இந்த வருடம் இன்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் அருள்மிகு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அபிஷேகம், அதனை தொடர்ந்து அலங்காரம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் பதிவு தீப ஆராதனை நடைபெற்றது. பதிவு தீப ஆராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாசக சபை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story