திருச்செந்தூரில் சோமவார சிறப்பு தீபாராதனை- திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு


சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு கோவிலுக்குள் சென்றார்.

தூத்துக்குடி

கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்றையதினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. மாலையில் சுவாமி மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

கோவிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு கோவிலுக்குள் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சோமவாரத்தையொட்டி ஏராளமான பெண்கள் கோவிலில் விளக்கேற்றி வழிபட்டனர்.

1 More update

Next Story